புழல் சூரப்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை ஒன்றரை கிலோ வெள்ளி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 மே, 2024

புழல் சூரப்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை ஒன்றரை கிலோ வெள்ளி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை


புழல் சூரப்பட்டு  ரோடு வி எம் கே நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்( வயது 56 ) இவர் சென்னை கோஷா மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி ஹேமாவதி (வயது 52 ) இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

 

இந்நிலையில்  தனது மகளுக்கு திருமணம் நிச்சயமாகி அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கின்றபடியால் விசாகப்பட்டினத்தில் உள்ள தனது கணவரின் மாமியாரை சந்திக்க தனது வீட்டை பூட்டிக்கொண்டு கடந்த 17ஆம் தேதி அன்று மாலை விசாகப்பட்டினம் சென்றுள்ளனர், இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு வீட்டின் பூட்டை உடைத்து வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 சவரன் நகை ஒன்றரை கிலோ வெள்ளி50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று உள்ளனர்


விசாகப்பட்டினம் சென்றிருந்த வீட்டின் உரிமையாளர் கோபாலகிருஷ்ணனும் அவரது மனைவியும் நேற்று மதியம் சுமார் 4 மணி அளவில் விசாகப்பட்டதிலிருந்து சென்னை வந்த அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் முன்பக்க கிரில் கேட் உடைக்கப்படும் முதல் மாடியில் தனது வீட்டில் முன்பக்க கதவு தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சடைந்த அவர்கள் உள்ளே சென்று போய் பார்த்ததில் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 70 சவரன் தங்க நகையும் ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்களும் லாக்கரில் இருந்த 50 ஆயிரம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதை அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.


பின்னர் இது பற்றிய தகவல் புழல் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளத்தூர் ஆணையாளர் பாண்டியராஜன் புழல் சரக உதவி கமிஷனர் சகாதேவன் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் மாதவரம் குற்ற பிரிவு ஆய்வாளர் ராஜன் மற்றும் போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர் அதன் பின்
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வர வைக்கப்பட்டனர்.
 

இதுகுறித்து புழல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து ஆராய்ந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர் இதற்கிடையில் கொளத்தூர் துணை ஆணையாளர் பாண்டியராஜன் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டத்தின் பேரில் ஒரு கமிஷனர் இரண்டு இன்ஸ்பெக்டர் கொண்ட மூன்று காவல் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
 

திருடு போன பொருட்களின் மதிப்பு சுமார் 35 லட்சத்திற்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இதன் அருகில் நெருக்கமான  குடியிருப்பு வீடுகள் இருந்த போதிலும் இந்த சம்பவம் நடந்தது  அதன் பின்னரும் வீடு திறந்து கிடந்ததையும் மர்ம நபர்களையும் யாரும் கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/