கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் அமைப்பு சார்பில் புதுச்சேரியில், மார்ச் 10, ஞாயிறன்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 11 மார்ச், 2024

கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் அமைப்பு சார்பில் புதுச்சேரியில், மார்ச் 10, ஞாயிறன்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

photo_2024-03-11_23-33-10

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் அமைந்துள்ள ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஆகச்சிறந்த 110 மகளிர்கள் சிங்கப் பெண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவுக்கு சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயலாளர் ச.விமலேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார். புதுச்சேரி கமலா அறக்கட்டளையின் இயக்குனர் ரமா வைத்தியநாதன், உலக கலை பண்பாட்டுக் கலைக்கூடம்  அமைப்பின் சர்வதேச தலைவி மதிப்புரு முனைவர் ஏ. ஆர். நிஷா, புதுச்சேரி அட்சயா அக்ரோ எஜுகேசனல் சேரிடபுள் டிரஸ்ட் இயக்குனர் எஸ். தமிழ்ச்செல்வி ஆகியோர்  குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.


கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் அமைப்பின் முதன்மை இயக்குனர் பொம்மிடி முருகேசன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஆகச்சிறந்த 110 துறை சார்ந்த மகளிர்கள் சிங்கப்பெண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மக்கள் சட்ட மையம் அமைப்பின் நிறுவனத்தலைவரும், ஜூனியர் சேம்பர் அமைப்பின் மண்டல துணைத் தலைவருமான மதுரை ஜிவி. முத்துக்குமார், சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனரும் தருமபுரி உணவு வங்கி தலைவருமான எ. சரவணன், மகளிர் தொழில் முனைவோர் கற்பகவள்ளி ராமன், உலக சாதனையாளர் குடும்பத்தைச் சேர்ந்த சென்னை நித்யா சிவா, காயல் சமையல் யூ டியூபர் மு.இ. பாயிஷா காதர், சேலம் ஸ்ரீ ஹரி குரூப்ஸ் மேலாண்மை இயக்குனர் மதிப்புரு முனைவர் ஆர்.கே. கோமதி, தருமபுரி பி.பிடிசி இயக்குனர் எஸ். காசிமணி, சென்னை வழக்கறிஞர் மதிப்புரு முனைவர் வி. உமா சங்கரி, சிஆர்டிஎஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சாதனை மகளிர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டி பேசினர்.


இறுதியாக கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் அமைப்பின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு இயக்குனர் தேவகி பரமசிவம் நன்றி கூறினார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் அமைப்பின் தலைவர் டி.எஸ். சசிகுமார், செயலாளர் சுசீந்திரன் சுப்பிரமணி, திட்டம் மற்றும் செயல்பாட்டு பிரிவு இயக்குனர் அன்பரசு ராமன், மாஸ்டர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் துரை மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் பிரகாஷ், சரத்குமார், செல்வமணி தன்னார்வலர் சதாம் உசேன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்வை கொடைக்கானல் பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர் சசிரேகா ஒருங்கிணைத்தார்.


முன்னதாக திருச்சி தளிர் கலை குழுவினர், தருமபுரி மாணவி மஞ்சு ஸ்ரீ, திருச்சி திருநங்கை ஆயிஷா பாத்திமா ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள்  நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/