மானாமதுரையில் 'குற்றம் க(டி)ளைதல் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

மானாமதுரையில் 'குற்றம் க(டி)ளைதல் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

.com/img/a/

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை  உள்ள அனுசியா திருமண மஹாலில் பெரியாரிய சிந்தனையாளர் திரு தீனதயாளன் அவர்களின் கைவண்ணத்தில் "குற்றம் க(டி)ளைதல்" புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய தீனதயாளன் அவர்கள் தன்னுடைய நூல் பற்றிய சொற்பொழிவு ஆற்றினார். இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே. எம். செரிப், ஊடகவியலாளர் கவிஞர் ராசகம்பீரன், பெரியாரிய இடதுசாரி சிந்தனையாளர் த. நிருபன்பாசு, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் புத்தக்கடை முருகன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, நகர் மன்ற துணை தலைவர் பால்சுந்தர், நகர் மன்ற உறுப்பினர்கள், 3-வது வார்டு செயளாலர் வழக்கறிஞர் ச. விக்னேஸ்வரன், கட்சி பிரமுகர்கள், சமூக சிந்தனையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், கவிஞர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad