தூத்துக்குடி மாவட்டம், பப்.14, தூத்துக்குடி பிரையன்ட் நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் மாரிமுத்து (21). இவர் நேற்று மதியம் புதிய துறைமுகம் பகுதியில் இருந்து பைக்கில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்செந்தூர் ரவுண்டான அருகே 4பேர் அவரை லிப்ட் கேட்டு பைக்கை நிறுத்தியுள்ளனர்.
அவர் பைக்கை நிறுத்தியதும் அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மாரிமுத்துவிடம் இருந்த ரூ.2ஆயிரம் பணம் மற்றும் அவரது மோட்டார் பைக்கை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக