தூத்துக்குடி மாவட்டம், பிப்.11, ஏரல் வட்டம், நாசரேத் பேரூராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலைஞர் நூற்றாண்டு பூங்காவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
இன்று 11.02.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் மேற்படி பூங்கா பகுதியில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.
மாலை 6.30 மணிக்கு மேல் இருள் சூழ்ந்த நிலையில் பூங்காவின் உள்பக்கம் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் எதுவும் எரியவில்லை, இரவு 8 மணி நிலவரப்படி மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தும் பூங்காவின் வெளிப்புறம் இருந்த தெரு விளக்குகளின் ஒளி மட்டுமே இருந்தது.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா
திறந்து வைத்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் மின்விளக்குகள் ஒளி இல்லாமல் இருப்பது மக்களிடையே சற்று மன கசப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக நாசரேத் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்திற்கு பிறகு சில இடங்களில் மின்சார அளவு குறைந்தே காணப்படுகிறது. பல இடங்களில் வணிக நிறுவனங்களும் தங்களது தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
ஆகவே மேற்படி பிரச்சனைகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக