பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை செய்து கொடூர தாக்குதல் நடத்திய திமுக எம்.எல்.ஏ கருணாநிதி மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மற்றும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான விடியா தி.மு.க அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை செய்து கொடூர தாக்குதல் நடத்திய திமுக எம்.எல்.ஏ கருணாநிதி மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மற்றும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான விடியா தி.மு.க அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்



Screenshot_2024-02-02-12-22-42-07_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f


தருண்சுரேஷ்     செல்  :   9791655612     மன்னார்குடி       01.02.2024 


கொலை ,கொள்ளை கற்பழிப்பு என  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு  சீா்கெட்டு போய்விட்டது என  மன்னார்குடியில்  அதிமுக  முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில்  நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் பேச்சு  


பட்டியலின   மாணவி மீது வன்கொடுமைகளை செய்து  கொடூர தாக்குதல் நடத்திய திமுக எம்.எல்.ஏ கருணாநிதி   மகன்  மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மற்றும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான விடியா தி.மு.க அரசை கண்டித்து  அதிமுக சார்பில்  தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான  ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் பெண்கள் உட்பட  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டு விடியா திமுக அரசுக்கு எதிராக  கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்  பேசுகையில்  திமுக அரசு ஆட்சிக்கு வந்து மூன்றை ஆண்டுகாலம் ஆகியும்   கொலை ,கொள்ளை , கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு கொடூர சம்பவங்கள் நாளுக்கு  நாள்  அதிகரித்துக்கொண்டே இருக்கிறது  இதற்கு காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு துணைபோகிறார்கள் காரணம் தமிழகத்தில் ஸ்டாலி்ன் குடும்ப ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்  தற்போது ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் படித்துகொண்டிருந்த தலீத் மாணவியை வீட்டு வேலைசெய்ய அழைத்து வந்து பாலியில் ரீதியாக துண்புறுத்தியுள்ளனர் இதனை கேட்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லையா ? ஏனென்றுகோட்டால் ஆளும் கட்சியின்  சட்டமன்ற உறுப்பினர் குடும்பம்  என்பதனால் தான்  காவல்துறை வேடிக்கை பார்த்து வருகிறது   தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இச்சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தபடும் என கூறிய பின்பு குற்றவாளிகளை காவல்துறை கைது  செய்துள்ளது இந்த குடுமபத்தினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் திமுக ஸ்டாலின் ஆட்சியில்  மது, கஞ்சா , கொலை ,கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதற்கு விடியா திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்து சட்ட ஓழுங்கை பாதுகாக்க முன்வரவேண்டும் என தெரிவித்தார்  இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட ஒன்றிய , நகர, கிளை கழக நிர்வாகிகள் பலர் கல்ந்துகொண்டனர் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad