தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட வேண்டும் - அமைச்சர் வலியுறுத்தல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 பிப்ரவரி, 2024

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட வேண்டும் - அமைச்சர் வலியுறுத்தல்.

.com/img/a/

தூத்துக்குடி, பிப்.02, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட வேண்டும் என கால்நடை, மீன் வளம் மற்றும் மீனவர் நலன் துறை அமைச்சர் அனிதா R.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்திய அரசின் விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தூத்துக்குடி விமான நிலையம் இயங்குகிறது. தற்போது விமான நிலையம் பல நவீன வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. விரிவாக்கம் பெற்று புதுப்பொலிவுடன் விரைவில் திறக்கப்பட உள்ள தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட வேண்டும்.


மிகவும் அரிதான திறமையுடையவர் சிவந்தி ஆதித்தனார். இதழியல், கல்வி, விளையாட்டு, தொழில் மற்றும் ஆன்மீகம் சார்ந்த துறைகளில் தனித் தன்மையுடன் விளங்கியவர்.


இந்தியாவின் முதல் பல்கலைகழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைகழகம் உள்ளிட்டு ஐந்து பல்கலைகழகங்கள் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.


தனது நேரடி முயற்சியால் ஆறு கல்லூரிகளை நிறுவி சாதாரண மக்கள் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வழிவகை செய்தவர். இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக பொறுப்பு வகித்து பல்வேறு விளையாட்டின் மேம்பாட்டிற்காக அரும்பணியாற்றியவர்.


புகழ்பெற்ற தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தின் ராஜ கோபுரம் 178 அடி உயரத்திற்கு கட்டியமைத்து ஆன்மீக தொண்டாற்றியவர். அனைத்து பகுதி மக்களையும் சமமாக மதித்து நல்லிணக்கம் பேணிப்பாதுகாத்தவர்.


இத்தகைய நற்குணங்களுடன் சிறந்து விளங்கிய உலக புகழ்பெற்ற தமிழன் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயரை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டுமென்ற அனைத்துப் பகுதி மக்களின் விருப்பத்தை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டுமென தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad