தருண்சுரேஷ் செல் : 9791655612 மன்னார்குடி 02.02.2024
விவசாயிகள் காவிரி நீரின்றி விலைநிலங்களை விட்டு தானே வெளியேற வேண்டும் என்கிற உள்நோக்கோடு திமுக அரசுசெயல்படுகிறது என்று மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் குற்றசாட்டு .
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது கர்நாடக அரசு தமிழகத்திற்கு வருகிற உபரிநீரையும் தடுத்து தமிழகத்ததை பாலைவனமாக்கவேண்டும் என்கிற தீவிர முயற்ச்சிக்கு திமுக அரசும் துணைபோகிறதோ என்று அஞ்சதோன்றுகிறது . காரணம் தமிழ்நாடு அரசு கார்ப்பரேட் நிறுவன அரசாக மாறி வருவதால் காவிரி டெல்டாவில் விளைநிலங்களை அபகரித்து தொழிற்சாலைகளை அமைக்க வேண்டுமானால் விவசாயிகள் தானே காவிரி நீரின்றி விலைநிலங்களை விட்டு வெளியேற வேண்டும் என்கிற உள்நோக்கோடு செயல்படுகிறதோ என்று அஞ்சிய தோன்றுகிறது. காவிரியில் அதிமுக ஆட்சி காலத்தில் பெற்றுக் கொடுத்த உரிமையை பறிகொடுத்துவிடுவோமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. நேற்றைய தினம் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு மேகதாது அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் கொடுத்தது மத்திய அரசு காவிரி குறித்து முடிவெடுக்கிற உரிமை நிர்வாக ஆணையத்திற்கும் , உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளதால் அறிக்கையை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது . மேகதாது அணைக்கட்டும் கர்நாடகா அரசின் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் சந்தேகமளிக்கிறது. இது குறித்து முதலமைச்சர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தியது குறித்து உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆணையத்தின் மீது அவசர வழக்காக தமிழக அரசு தொடர வேண்டும் என வலியுறுத்துகிறேன். மறுக்கும் பட்சத்தில் காவிரி மேகதாது விவகரத்தில் தமிழ்நாடு விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தை காவிரி டெல்டாவில் தீவிர படுத்துவோம் என எச்சரிக்கிறேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக