சிவகங்கை மாவட்டம் சிவகங்கை எம்.எம்.பி. செந்தில் ஆண்டவர் திருமண மண்டபத்தில் சிவகங்கை நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு என். அருள் பெத்தையா அவர்களின் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்த ஆலோசனை மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளிடமும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் ஏ.சி. சஞ்சய் காந்தி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், வட்டார தலைவர்கள் மதியழகன், வேலாயுதம், செந்தில்குமார் மற்றும் ஆரோக்கியதாஸ், வட்டார பொறுப்பாளர்கள் உடையார், மாரிமுத்து, சிவக்குமார், முத்துமாயன் மற்றும் பாண்டிவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் சோணை, சிதம்பரம் மற்றும் வெள்ளைச்சாமி, மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தாராணி, மாநில மகளிரணி துணை தலைவி ஸ்ரீவித்யாகணபதி, மாவட்ட தலைவி இமயமெடோனா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சையது இப்ராஹிம், வட்டார மகளிர் தலைவி காளீஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் மோகன்ராஜ் மற்றும் சண்முகராஜன் ஆகியோரும்.
மேலும் நகர் மன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், மகேஸ்குமார், பிரியங்கா, புருஷோத்தமன், ஒன்றிய கவுன்சிலர் இளங்கோவன், நாமனூர் முருகானந்தம், சேதுராமனன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகர், படமாத்தூர் காளிமுத்து, இளையான்குடி செல்லப்பாண்டி, குமார், காளையார்கோவில் ஜார்ஜ், செங்குட்டுவன், விக்னேஸ்வரன், சீனிவாசன், மகளிர் அணி லதா, சுசீலா, தகவல் தொழில்நுட்ப அணி அருள்ஜோதி, மகாலிங்கம், லெட்சுமணன், முத்துவடிவேல், மணிவண்ணன், கொட்டகை கண்ணன், மாவட்ட நகர வட்டார பேரூர் காங்கிரஸ் கமிட்டி, இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், முன்னாள் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக