தூத்துக்குடி மாவட்டம், பிப்.14, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பாரத் கேஸ் குடோனுக்கு அருகில் தகன மேடை அமைந்துள்ள இடத்தில், இரண்டு மாத காலமாக மழை நீர் தேங்கி இருந்து இன்று 14.02.2024 தான் தேங்கியிருந்த மழை வெள்ள நீர், தாமிரபரணி ஆற்றுக்குள் வெளியேற்றப்படுகிறது.
சென்ற வருடம் 2023 டிசம்பர் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையினால் ஸ்ரீவைகுண்டம் ஆற்று பகுதி அருகில் இருக்கக்கூடிய தகன மேடையை சுற்றிலும் மழை நீர் தேங்கியிருந்தது. இதனால் இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் திணறி வந்தனர். தற்போது தகனம் மேடையில் ஒன்று மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் இடிந்து தரை மட்டமானது.
எனவே பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர், இந்நிலையில் பாதிப்படைந்த பொதுமக்கள், வணிகர்கள் இணைந்து திருவைகுண்டம் வட்டாட்சியர் தலைமையில் இன்று தாமாக முன்வந்து, தேங்கிருந்த மழை நீரை தாமிரபரணி ஆற்று பகுதிக்குள் வெளிட்டெற்றிவருகின்றனர்.
ஆகையால் திருவைகுண்டம் ஊருக்குள் செல்லக்கூடிய புதிய பாலம் இன்று மாலை முதல் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக