மகாத்மா காந்தி நினைவு நாள் மற்றும் மத நல்லிணக்க நாள்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், சிந்தனையாளர் பேரவையின் ஒருங்கிணைப்பில், திருவள்ளுவர், வள்ளலார் சிலை அருகில் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், மறைமலைநகர் நகரமன்ற உறுப்பினர் திருமதி. விஜயலட்சுமி நித்தியானந்தம் தலைமையில் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் 13 வது நகரமன்ற உறுப்பினர் திரு.எஸ். ஆல்பர்ட், 14 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் திரு. பெருமாள், மு.நித்தியானந்தம், க.பன்னீர்செல்வம், பி.எல்.ஜோசப் ராஜ், கூடுவாஞ்சேரி ராசு, லியோன், பச்சமுத்து, ராஜ்குமார் அரங்கநாதன், மகேந்திரன், லோ.குமரன், பாஷா, பாஸ்டர்.பிரேம் குமார், தட்சிணாமூர்த்தி,பி.சி.லூயிஸ், சிவஞான பாண்டியன், எல்.ராஜேஷ், ஹரிஷ் பாலாஜி, பி.ராஜேஷ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக