குரும்பூர் - புகையிலைப் பொருட்கள் கடத்தல், பெண் உட்பட 4 பேர் கைது - ரூபாய் 1,88,000/- மதிப்புள்ள 273 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய கார், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

குரும்பூர் - புகையிலைப் பொருட்கள் கடத்தல், பெண் உட்பட 4 பேர் கைது - ரூபாய் 1,88,000/- மதிப்புள்ள 273 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய கார், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம், பிப்.18, குரும்பூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கடத்திய பெண் உட்பட 4 பேர் கைது - ரூபாய் 1,88,000/- மதிப்புள்ள 273 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய கார், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஸ்டெல்லா பாய்  மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (17.02.2024) குரும்பூர்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ நாலுமாவடி பகுதியில் ஒரு கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, 


அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் திருப்பூர் காங்கேயம் தேவன் பாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகன் தர்மலிங்கம் (42), உடன்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சித்திரைச் செல்வன் (42) கீழ நாலுமாவடி தெற்கு தெருவை சேர்ந்த கார்த்தீசபாண்டியன் மகன் நீலகிருஷ்ணன் (43) மற்றும் ஈரோடு சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மனைவி பெருமாள் அம்மாள் (54) ஆகியோர் என்பதும் அவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார் எதிரிகளான தர்மலிங்கம், சித்திரை செல்வன், நீல கிருஷ்ணன் மற்றும் பெருமாள் அம்மாள் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய்  1,88,000/-  மதிப்புள்ள சுமார் 273 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 


மேலும் இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/