தூத்துக்குடி - செல்போன் திருடியவர் கைது - திருடப்பட்ட ரூபாய் 21,000/- மதிப்புள்ள செல்போன் மீட்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

தூத்துக்குடி - செல்போன் திருடியவர் கைது - திருடப்பட்ட ரூபாய் 21,000/- மதிப்புள்ள செல்போன் மீட்பு.

.com/img/a/

தூத்துக்குடி மாவட்டம் :பிப்.11, 
தூத்துக்குடி செல்போனை திருடியவர் கைது - திருடப்பட்ட ரூபாய் 21,000/- மதிப்புள்ள செல்போன் மீட்பு.


தூத்துக்குடி கிருபை நகரை சேர்ந்த ஆல்வின் ஞானபிரகாசம் மகன் பிரின்ஸ் ஸ்டாலின் (42) என்பவர் கடந்த (09.02.2024) அன்று தனது இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங் கவரில் தனது செல்போனை வைத்துவிட்டு வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். 


பின்னர் வந்து பார்க்கும்பொழுது அவர் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த அவரது செல்போன் திருடு போயுள்ளது.

 
இதுகுறித்து பிரின்ஸ் ஸ்டாலின் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்த பொன்ராஜ் மகன் ஜெகன்ராஜ் (20) என்பவர் மேற்படி பிரின்ஸ் ஸ்டாலினின் செல்போனை திருடி சென்றது தெரியவந்தது.


உடனே தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து எதிரி ஜெகன்ராஜை கைது அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 21,000/- மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad