தூத்துக்குடியில் இம்மாதம் பிப்ரவரி 17 ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

சனி, 3 பிப்ரவரி, 2024

தூத்துக்குடியில் இம்மாதம் பிப்ரவரி 17 ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

.com/img/a/


தூத்துக்குடி, பிப்.03,  ஏ.பி.சி மகாலெட்சுமி மகளிர் கலைக்கல்லூரியில் வருகிற 17ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.


இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்;ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஏ.பி.சி மகாலெட்சுமி மகளிர் கலைக்கல்லூரி இணைந்து வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஏ.பி.சி மகாலெட்சுமி மகளிர் கலைக்கல்லூரியில் 17.02.2024 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது.


இதில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 100 –க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிB.E, Diploma, Nursing, ITI படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.


இந்த முகாம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய Thoothukudi Employment office என்ற Telegram channel-ல் இணையவும். உங்கள் அலைபேசியில் Telegram செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு Thoothukudi Employment office என search செய்தால் channel தோன்றும். அதன் உள் நுழைந்து Join என்பதனை click செய்து எளிதில் channel-ல் இணையலாம். மேலும் இது தொடர்பான விபரங்களை அறிய 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


மேலும் இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டால் அவர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதிதெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad