பிப்.16 அகில இந்திய வேலை நிறுத்தம் தொடர்பாக தூத்துக்குடியில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சாா்பில் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் பிப்.16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியில் ஐ.என்.டி.யு.சி, மாநில செயல் தலைவர் கதிர்வேல் தலைமையில் அனைத்து மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் எல்.பி.எஃப் சுசீ ரவீந்திரன், ஏஐடியுசி கருப்பசாமி, கிருஷ்ணராஜ், லோகநாதன் பாலசிங்கம், சிஐடியு பேச்சிமுத்து, ரசல், அப்பாதுரை ஐஎன்டியுசி ராஜகோபால், முருகேசன், ஹெச்எம்எஸ் ராஜ்குமார், ஜாகீர் உசேன், காந்தி, சேகர், ஏஐசிசிடியு சகாயம், சிவராமன், எம்எல்எப் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக