தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை திரும்பப் பெற சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் தகவல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இழந்த ஆவணங்களைத் திரும்ப பெற திங்கள் கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிச.17,18-ஆம் தேதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஆவணங்களை இழந்தவா்களுக்கு, அதனைத் திரும்பப் பெறும் வகையில் சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் திங்கள் கிழமைகளில் இந்த முகாம் நடைபெறும். இம்முகாமில் பொதுமக்களின் வசதிக்காக இ-சேவை மையங்கள் செயல்படும். வருவாய்த் துறை உள்ளிட்ட அரசு துறைகளால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வாகன ஓட்டுநா் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதாா் அட்டை போன்ற அரசு ஆவணங்களை இழந்தவா்கள், இந்த முகாம் வாயிலாக நகல்களைப் பெற்றுக் கொள்ளலாம். இச்சேவை கட்டணமின்றி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக