நாசரேத்தில் நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" முகாம் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

நாசரேத்தில் நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" முகாம்

.com/img/a/

.com/img/a/

தூத்துக்குடி மாவட்டம், ஜன.27, ஏரல் வட்டம் நாசரேத் பேரூராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் எனும் முகாம் நிகழ்ச்சி ஜோதி மாளிகையில் வைத்து  நடைபெற்றது.


தமிழக முதல்வர் ஆணைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தலின்படி நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, கூட்டுறவு துறை, மின்சாரத்துறை, காவல்துறை, சமூக நலத்துறை & மகளிர் உரிமை துறை, ஊரக வளர்ச்சித் துறை,  பிற்படுத்தபட்டோர் நலத்துறை, வேலைவாய்ப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம், முதல்வரின் தனிப்பிரிவு உட்பட 13 துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.


நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள்  செய்திருந்தனர்.

நாசரேத் செய்திகளுக்காக Vn. சரவணன்.. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad