கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருள்தரும் முற்றில்லா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் தைப்பூசத் திருவிழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 ஜனவரி, 2024

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருள்தரும் முற்றில்லா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் தைப்பூசத் திருவிழா

 


கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருள்தரும் முற்றில்லா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 25.1.2024 வியாழக்கிழமை மாலை  நான்கு மணிக்கு மேல் ஒவ்வொரு ஊர்களில் இருந்தும் மொத்தம் எட்டு ஊர் சிவாலயங்களில் இருந்து சோமஸ்கந்தர் அம்பாள் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லாக்கில் எழுந்தருளி சுவாமிகள் சந்திப்பு நடைபெற்றது.




 பின்னர் எட்டு ஊர் சுவாமிகள் கடமந்துறை காவிரி ஆற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது இவ்விழாவில் குளித்தலையை சுற்றியுள்ள கடம்பர் கோயில், பெட்டவாய்த்தலை, ராஜேந்திரம், அய்யர்மலை, திருஈங்கோய்மலை,




முசிறி,வெள்ளூர், கருப்பத்தூர், ஆகிய எட்டு திருக்கோயிலில் இருந்து சோமஸ்கந்தர் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்தனர். இவை வேறு எங்கும் இல்லாத சிறப்பு என ஊர் மக்கள் தெரிவித்தனர் இரவு முழுவதும் கடமந்துறை காவிரி ஆற்றில் எழுந்தருளிய சுவாமிகள் 26.1.2024 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மேல் மீண்டும் சந்தித்து மகாதீபாரதனை நடைபெற்ற பின்னர் அவரவர் திருக்கோவிலுக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவில் திருக்கோயில் பணியாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆன்மீக அன்பர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/