பாத யாத்திரை செல்வோர் சாலையின் வலது புறமாக செல்ல மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 22 ஜனவரி, 2024

பாத யாத்திரை செல்வோர் சாலையின் வலது புறமாக செல்ல மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தல்.

தூத்துக்குடி மாவட்டம், ஜன.22, திருச்செந்தூர் கோயிலுக்கு  பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்நிலையில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு மோட்டார் வாகனச்சட்டம் சாலை விதிகள் மற்றும் வழிமுறைகள் சட்டத்தின்படி பாதசாரிகள் எப்பொழுதும் சாலையில் வலது புறமாகவே நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது. 


அப்பொழுதுதான் எதிரே இடது புறமாக வரும் வாகனங்களை கண்டுகொண்டு விபத்து நேரா வண்ணம் பக்தர்கள் தங்களை காத்துக் கொள்வதோடு மற்ற வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம்.

அதேபோன்று  பாதயாத்திரை வரும் பக்தர்கள் முதுகு பகுதி மற்றும் தோல் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் (Reflect Sticker) ஒட்டி பாதுகாப்பாக பாதையாத்திரை செல்லுமாறும், இந்த தைப்பூசத் திருவிழாவை விபத்தில்லாமல், பாதுகாப்பான முறையில் வழிபட்டு செல்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.


மேலும் திருக்கோவிலுக்கு இறைவழிபாட்டு எண்ணத்துடன் வரும் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட வேஷ்டி, சட்டை, டீ ஷர்ட்கள், பனியன்கள் போன்றவற்றை அணிந்து வரவோ, அதை வெளிப்படுத்தும் வகையில் முகத்தில் வர்ணம் பூசி வரவோ, கொடிகள் கொண்டு வரவோ கூடாது, மேலும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி முருகக் கடவுள் போன்ற கடவுள் புகைப்படங்கள் தவிர வேறு யாருடைய புகைப்படமும் எக்காரணத்தைக் கொண்டும் வாகனங்களில் பேனர்கள் வைத்து வரக்கூடாது.


அதே போன்று பக்திப்பாடல்கள் தவிர சாதி ரீதியான பாடல்களையோ மற்றும் சினிமா பாடல்களையோ இசைக்கவோ, ஒலிக்கவோ கூடாது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை கோவிலுக்கு எடுத்து வரக்கூடாது மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/