ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரடி கள ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 31 ஜனவரி, 2024

ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரடி கள ஆய்வு.

.com/img/a/

ஆறுமுகநேரி, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று (31.01.2024) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆறுமுகநேரி நல்லூர் செல்லும் சாலையின் இருபுறமும் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தற்போது 30 ஹெக்டேர் பரப்பளவில் மறு நெல் நடவு செய்யப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். 


இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) சாந்தி ராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி, வேளாண்மை துணை இயக்குநர் ஜேங்கின் பிரபாகர்,  திருச்செந்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கட சுப்பிரமணியன், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

.com/img/a/

ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட செல்வராஜபுரத்தில் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்த கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பின்பு, ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி திடீர் ஆய்வு மேற்கொண்டு, புறநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்  குறித்தும், மருந்து பொருட்களின் இருப்பு குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார்கள். இந்த ஆய்வின்போது, ஆறுமுகநேரி பேரூராட்சி மன்றத் தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம், உதவிப் பொறியாளர் அவுடைப்பாண்டி, செயல் அலுவலர் கணேசன், திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமனன், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட ராணி மகாராஜபுரத்தில் ஆறுமுகநேரி பேரூராட்சி மூலம் 15ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூபாய் 35 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் அரசு துணை சுகாதார நிலையக் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட லெட்சுமிபுரத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ், ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகக் கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அத்துடன் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள், அதன் தரம், பயன்பெறும் குழந்தைகள்,  வருகைப் பதிவுகள் மற்றும் குழந்தைகள் வயதுக்கேற்ற எடை, எடைக்கேற்ற உயரம் இருக்கிறார்களா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து, கேட்டறிந்தார்கள். 


இந்த ஆய்வின்போது, காயல்பட்டினம் நகர் மன்றத் தலைவர் முத்துமுகமது, காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் குமார் சிங், காயல்பட்டினம் நகராட்சி மன்ற துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமனன், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad