ஏரல் தாமிரபரணி ஆற்றில் மிதந்த ஆண் சடலம் - காவல் துறையினர் விசாரணை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

ஏரல் தாமிரபரணி ஆற்றில் மிதந்த ஆண் சடலம் - காவல் துறையினர் விசாரணை

.com/img/a/

தூத்துக்குடி மாவட்டம், ஜன.28, ஏரல் தாமிரபரணி ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக ஏரல் அங்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஏரல் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில்இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.


பின்னர் அந்த சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்தாராஅல்லது வேறு ஏதாவது வேறு ஏதாவது காரணம் உண்டா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad