நாசரேத் நகரில் நடமாடும் மின்னணு வாக்காளர் சரிபார்ப்பு விழிப்புணர்வு வாகனம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் பொதுமக்களிடம் விளக்கினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

நாசரேத் நகரில் நடமாடும் மின்னணு வாக்காளர் சரிபார்ப்பு விழிப்புணர்வு வாகனம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் பொதுமக்களிடம் விளக்கினார்.

.com/img/a/

.com/img/a/

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி நாசரேத்தில் நடமாடும் மின்னணு வாக்காளர் சரிபார்ப்பு விழிப்புணர்வு வாகனத்தில் ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விளக்கம் அளித்தார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது வருகின்ற பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் வரை மக்களிடம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தலைமை தேர்தல் அதிகாரி சென்னை அவர்கள் அறிவுறுத்தியதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி வழிகாட்டுதலின்படி, இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு பதிவு இயந்திர செயல்முறை விளக்க மையம் 28.12.2023 அன்று முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி கோவில்பட்டி திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.


அதன் அடிப்படையில் நடமாடும் செயல்முறை விளக்க வாகனங்கள் மூலம் தேசிய வாக்காளர் தினமான ஜன.25 முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வுக்கான நடமாடும் செயல்முறை விளக்க LED திரை கொண்ட வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.


சட்டமன்ற தொகுதிகள் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு (BALLOT RECEIPT) காகித தணிக்கை முறை இயந்திரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட அலுவலர் மற்றும் காவல் துறை பாதுகாப்புடன் குறிக்கப்பட்ட வழித்தடத்தில் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக வைக்கப்பட உள்ளது.


திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி நாசரேத்தில் நடமாடும் மின்னணு வாக்காளர் சரிபார்ப்பு விழிப்புணர்வு வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வுக்கான நடமாடும் செயல்முறை விளக்க LED திரையில் ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் பொதுமக்களிடம் விளக்கம் அளித்தார். மேலும் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை முறை இயந்திரம் தொடர்பாக விழிப்புணர்வு பெற்று பயன்பெற வேண்டும் என பொதுமக்களை கேட்டுக் கண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad