தூத்துக்குடி மாவட்டம், ஜன.30, நாசரேத், தாய்லாந்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி சிலம்ப மாணவ மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
தாய்லாந்தில் உள்ள பட்டாயாவில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பம் போட்டியில் தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், போன்ற பல்வேறு நாடுகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் தூத்துக்குடி சிலம்ப மாணவ மாணவிகள் ஒற்றைக்கம்பு பிரிவில் மாணவி இளநங்கை தாரகை முதலிடமும், சிலம்பம் தொடும் முறை பிரிவில் பூவரசன் முதலிடமும் , அலங்கார சிலம்பம் போட்டியில் பிரவீன் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவ மாணவிகளையும் பயிற்றுவித்த நாசரேத் நகரை சார்ந்த கராத்தே டென்னிசன் குழுவினரையும், அஇஅதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.பி சண்முகநாதன் வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக