கரூரில் அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி பிராணப் பிரதிஷ்டை பெருவிழா கொண்டாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 22 ஜனவரி, 2024

கரூரில் அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி பிராணப் பிரதிஷ்டை பெருவிழா கொண்டாட்டம்

 


கரூரில் அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி பிராணப் பிரதிஷ்டை பெருவிழா கொண்டாட்டம்



அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி பிராணப் பிரதிஷ்டை பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கரூர் பிரேம் மஹாலில் பெரிய திரையில் காலை 9 மணி முதல் நேரலை காட்சியாக 2000 பேர் அமரும் வகையில் ஏற்பாடு செய்து திரையிடப்பட்டது. மேலும் இவ்விழாவில் ஆன்மீக கலை நிகழ்ச்சிகள்,



ஹனுமன் சாலிசா பாராணயம், ஸ்ரீ ராம நாம தாரக மந்திரம் ஜெபம், மகாதீபாரதனை மற்றும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.



வரலாற்று சிறப்புமிக்க இப்புண்ணிய நிகழ்வை கரூர் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளரும் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவருமான செந்தில்நாதன் ஸ்ரீராமபிரானை தரிசனம் செய்தார்.



மகளிரணி மாநில துணைத் தலைவர் மீனா வினோத் குமார் அவர்களும் கரூர் மாவட்ட பொது செயலாளர் ஆறுமுகம் அவர்களும் கரூர் மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் முருகன் அவர்களும் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆன்மீக பக்தர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ராமபிரானை தரிசனம் செய்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கரூர் செய்தியாளர் பார்த்திபன் மற்றும் கரூர் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/