ஆத்தூரில் மக்களுடன் முதல்வர் முகாம் - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 31 ஜனவரி, 2024

ஆத்தூரில் மக்களுடன் முதல்வர் முகாம் - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

.com/img/a/

ஆத்தூர், அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத்தொடர்ந்து, 



இன்று (31.01.2024) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆத்தூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெறும் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, பார்வையிட்டார். 

.com/img/a/

ஆட்சியருடன் ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.கே.கமால்தீன், ஆத்தூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஸ்வரன், திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமனன், ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


பின்னர், திருச்செந்தூர் வட்டம், சுகந்தலை கிராமம், தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் கடம்பா குளம் மறுகாலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சீரமைக்கப்பட்டுள்ள சாலைப் பணிகள் மற்றும் புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்கப்படவுள்ள இடத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 


இந்த ஆய்வின்போது, திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமனன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad