![]() |
அர் ரஹீம் ஹஜ் சர்வீஸ் உரிமையாளர்சாதிக் பாட்சா. |
இதை அறிந்து நான் அவர்களிடம் பணத்தை கேட்கும் போது இன்று நாளை காலம் தாழ்த்தி வந்தனர். ஆகையால் நான் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன் புகாரின் பேரில் ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் வாகிதாபானு அவர்கள் என்னை அழைத்து மூன்று மாதத்தில் சாதிக் பாஷா உங்களுக்கு பணத்தை திருப்பி தந்து விடுவார் என்று சாதிக் பாஷா சாதகமாக பேசி என்னிடம் எழுதி வாங்கி அனுப்பி விட்டனர்.இதனால் மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டு மீண்டும் எனது பணத்தை மீட்டுத் தரக் கூறி தமிழக முதல்வருக்கு புகார் ஒன்று அனுப்பி உள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்.
பின் 2019 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட ஆத்துரை சேர்ந்த அமீர் அவர்களிடம் கேட்டபோது 2019 ஆம் ஆண்டு என் தாயும் தந்தையும் புனித ஹஜ் பயணம் அனுப்ப ஆசைப்பட்டேன் ஆனால் எங்களை அழைத்துச் செல்லாமல் ஏமாற்றி விட்டார் சாதிக் பாட்சா ஆகையால் சாதிக் பாஷா அவர்கள் மீது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன் என்று அமீர் அவர்கள் கூறினார். இந்த மோசடி சம்பந்தமாக அந்த பகுதி ராயப்பேட்டை உதவி ஆணையர் பாலமுருகன் அவர்களிடம் தொடர்பு கொண்டு நமது நிருபர் கேட்டபோது புகாரின் பேரில் விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மீண்டும் 2024ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணத்திட்ட அறிவிப்பை அர் ரஹீம் ஹஜ் சர்வீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது, அரசு உடனடியாக இந்த நிறுவனத்தில் தணிக்கை செய்து, உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் பணத்தினை திரும்ப பெற்றுக்கொடுக்க காவல்துறைக்கு அணைபிறப்பிக்க வேண்டும் என இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட இசுலாமியர்கள் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக