கன்னியாகுமரி அகில உலக மீனவர் பேரவையின் முப்பெரும் விழாவில் P.T.செல்வகுமார்-க்கு விருது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 நவம்பர், 2023

கன்னியாகுமரி அகில உலக மீனவர் பேரவையின் முப்பெரும் விழாவில் P.T.செல்வகுமார்-க்கு விருது.


குளச்சல், அகில உலக மீனவர் பேரவையின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர்  M.ஆனந்த் தலைமை தாங்கினார். இவ்விழாவில், திறமையாளருக்கும், சாதனையாளருக்கும், விருது வழங்கப்பட்டது.


இதில், சிறந்த சமூக சேவை, கல்வியில் சிறப்பாக பல கட்டிடங்களை கட்டி சேவை செய்யும் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் P.T.செல்வகுமாருக்கு "நல்லிணக்க நாயகன் விருது" -னை தக்கலை  மறைமாவட்ட ஆயர் ராஜேந்திரன் வழங்கி கௌரவித்தார்.


விருதுனை பெற்ற P.T.செல்வகுமார் பேசியது: "இப்படிப்பட்ட நல்லிணக்க விழாக்கள்; சமூகத்திற்கு பாதுகாப்பும், வளர்ச்சியும், ஒற்றுமையும், உருவாக்கும். நமக்கு அன்பையும், அகிம்சையும் விட்டு சென்ற புத்தர், இயேசு, காந்தி, வள்ளலார் போன்றவர்கள் தான் சமூகம் அன்புடன் இருக்கிறது. அன்று இவர்கள் விதைத்த விதை தான் காரணம்.


வன்முறையாளர்களும், வில்லாதி வில்லர்களும், எங்காவது ஒரு இடத்தில் தோற்றே ஆக வேண்டும். ஆனால் அகிம்சை, அன்பு.. எங்கேயும் தோல்வி அடைந்த வரலாறு இல்லை. என்னுடைய கல்வி சேவைக்காக இந்த விருது பெற்றமைக்கு பெருமை அடைகிறேன்." இவ்வாறு,  P.T.செல்வகுமார் பேசினார்.
இவ்விழாவில், திறமையாளருக்கும், சாதனையாளருக்கும், விருது வழங்கப்பட்டது.


நிகழ்வில், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், வள்ளலார் பேரவை  பத்மேந்திர சாமிகள், முன்னாள் நீதிபதி சந்தோஷ், ஜமாத் கூட்டமைப்பு தலைவர் கான், மற்றும் பல்வேறு மீனவர் கூட்டமைப்பு சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/