தூத்துக்குடி, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில், தமிழ்நாடு மீன்வளம் - மீனவர் நலத்துறை சார்பில் புதிதாக தொடங்கியுள்ள தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் சங்கத்தினை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.
பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, கழக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக