கத்தாழை கிராமத்தில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி சிலர் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 நவம்பர், 2023

கத்தாழை கிராமத்தில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி சிலர் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கத்தாழை கிராமத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் பன்னீர்செல்வம் தலைமையில் கோவில் முகப்பில் ஏற்பாடுகள் தயாரானது .இந்நிலையில் இதனை கிராம மக்கள் மற்றும் கத்தாழை ஊராட்சியின் ஒன்றாவது மற்றும் நான்காவது வார்டு கவுன்சிலர்கள் சேர்ந்து கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர். 


இதுகுறித்து கூறும் போது இப்பகுதியில் சுமார் 300 ஏக்கர் நேரடி நெல் விதைப்பு செய்து  வரும் நிலையில் பாசனத்திற்கு என்எல்சி நிர்வாகத்திடமிருந்து  தண்ணீர் கேட்டு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்  ஊராட்சி நிர்வாகம் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இப்பகுதியில் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு என்எல்சி நிர்வாகம்நிலம் மனை கையகப்படுத்துவதற்கு சமகால இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பு குறித்து ஊராட்சி நிர்வாகம் கிராம மக்களுக்கு  ஒத்துழைப்புத்தரவில்லை.


நாங்கள்  கோரிக்கைகளை நிறைவேற்றக் கேட்டும் ஊராட்சி மன்றம் அதனை செய்து தரவில்லை. அதனால் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக கத்தாழை கிராம மக்கள் மற்றும் இரண்டு வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/