தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு வரவேற்பு குழு செயலாளராக இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தி.மு.க. இளைஞர் அணியின் 2- வது மாநில மாநாடு, சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையம் பகுதியில் டிசம்பர் 17 - ந் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அழைப்பு விடுத்து வருகிறார். மேலும், 'நீட்' தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து பெறப்பட்ட மனுவையும் இளைஞர் அணி மாநில மாநாட்டில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்க இருக்கிறார்.
மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக பல்வேறு குழுக்களை நியமனம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இளைஞர் அணி மாநாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக 23 குழுக்கள் அமைக்கப்ப–டுகின்றன. கட்சி நிர்வாகிகள் அனைவரும் அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதன் படி, வரவேற்பு குழு செயலாளராக தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர்களாக வீரபாண்டி பிரபு, மணிகண்டன், அருண்பிரசன்னா, கேபிள் சரவணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, 23 குழுக்களுக்கும் செயலாளர், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக