தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி "வாக்களிப்பதின் முக்கியத்துவம்" குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்களிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் என்ற தலைப்பில் "சுவர் இதழ்" போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா இன்று கல்லூரி கணினி ஆய்வகத்தில் நடைபெற்றது.
முதலாம் ஆண்டு மாணவர் ஜெயசூர்யா முதலிடத்தையும் நம்பி நாராயணன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
இந்நிகழ்வில் கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், முதலாம் ஆண்டு துறை தலைவர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Lion Vn சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக