நாசரேத் - சுற்று சூழலை பாதுகாக்க மர கன்றுகள் நட்டு வைத்த பாலிடெக்னிக் முதல்வர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 நவம்பர், 2023

நாசரேத் - சுற்று சூழலை பாதுகாக்க மர கன்றுகள் நட்டு வைத்த பாலிடெக்னிக் முதல்வர்.

தூத்துக்குடி மாவட்டம், CSI தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சுற்றுச்சூழல் கரிசனத்துறை மூலமாக நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரியில் மர கன்றுகள் நடும் விழா நேற்று (நவ-18), நடைபெற்றது.


கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமையில் 25 மர கன்றுகள் நடப்பட்டது. இந்த மர கன்றுகள் நட்டு இயற்கையை பாதுகாக்க சுற்று சூழல் கரிசனை துறை இயக்குனரும் போதகருமான ஜான் சாமுவேல் முன்னெடுத்து வருகிறார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு கைத்தொழில் பாட சாலை, மர்காஸ்சிஸ் மேல்நிலை பள்ளி வளாகங்களில் மர கன்றுகள் நட்டு வைத்தார். இன்னும் பல இடங்களில் நட்டு இயற்கையை பாதுகாக்க ஆர்வமாக இருப்பதாகவும் தங்கள் பகுதிகளில் மர கன்றுகள் நட ஆர்வம் உள்ளவர்கள் தம்மை தொடர்பு கொள்ளலாம் என அருட்திரு ஜான் சாமுவேல் அவர் தெரிவித்தார். 


மேலும், இன்று நவ 19 காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நாசரேத் - திருமறையூர்  வளாகத்தில் பனை ஓலை அலங்காரம் குறித்த பயிற்சி நடைபெறும் என்றும் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் என்றார். தொடர்புக்கு 9488400874 என்ற எண்ணில் விபரங்களை கேட்டு பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/