திருச்செந்தூர் - கந்தசஷ்டி திருவிழா - செந்தூர் சிறப்பு ரயில் சேவை துவக்கம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 நவம்பர், 2023

திருச்செந்தூர் - கந்தசஷ்டி திருவிழா - செந்தூர் சிறப்பு ரயில் சேவை துவக்கம்.

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதனையொட்டி தென்னக ரயில்வே சென்னை - திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்குகிறது.


வண்டி எண் : 06001 சென்னை எழும்பூரில் இருந்து நாளை 17.11.2023 வெள்ளிக்கிழமை இரவு 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் சனிக்கிழமை மதியம் 12:45 மணிக்கு திருநெல்வேலி வந்து அடைகிறது.


வண்டி எண் : 06002 திருச்செந்தூரில் இருந்து 12.11.2023 சனிக்கிழமை இரவு 10:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:45 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடைகிறது.


மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் கடலூர் விழுப்புரம் வழியாக தாம்பரம் செல்கிறது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கி விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/