கன்னியாகுமரி மாவட்டத்தில் மது மற்றும் போதையின் தீமைகள் குறித்து விழிப்பணர்வு கலைப்பிரசாரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர்,தொடங்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 நவம்பர், 2023

கன்னியாகுமரி மாவட்டத்தில் மது மற்றும் போதையின் தீமைகள் குறித்து விழிப்பணர்வு கலைப்பிரசாரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர்,தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் _ நடைபெற்ற மது மற்றம் போதையினால் ஏற்படும் தீமைகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலைப்பிராச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், கொடியசைத்து துவக்கி வைத்தார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கல்லூரி மாணவ மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் மற்றம் பொதுமக்களுக்க மது மற்றும் போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தல், விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம்  தொடங்கி வைக்கப்பட்டது இந்த விழிப்புணர்வு கலைப்பிரச்சாரமானது இன்று முதல் 10 நாட்களுக்கு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தொடர்ந்து நடைபெறும்.


இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (ஆயம்) ஜெ. லொரைட்டா, அலுவலர்கள், பணியாளர்கள், கலைப்பிராச்சார குழுவினர் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/