தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு - எஸ்.பி அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 நவம்பர், 2023

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு - எஸ்.பி அறிவிப்பு.

.com/img/a/

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவிப்பு. தூத்துக்குடி மாவட்டத்தில் 53 ஆண்கள் 6 பெண்கள் என 59 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்ப தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 20 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும் சேவை மனப்பான்மையுடனும், தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித குற்ற பின்னணி இல்லாதவராகவும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.


இத்தேர்வு வருகிற 10.11.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கவாத்து மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.


மேற்படி தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் கல்வி, வயது நிரூபண அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad