ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு ஆடை வழங்கும் விழா
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அடுத்த திருநகர் மதுரை வடக்கு ரோட்டராக்ட் சங்கம் சார்பாக ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு தீபாவளி திருநாளை ஒட்டி புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது இதில் சங்க தலைவர் சுல்தான் தலைமையிலான உறுப்பினர்கள் புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியை பாரம்பரிய கொண்டனர்.. ரோட்டராக்ட்
சங்க தலைவர் சுல்தான் கூறுகையில்
புன்னகை என்பது ஒரு அழகான விஷயம் அப்படிப்பட்ட அழகான விஷயத்தை மக்களிடம் கொண்டுவருவதற்காக
2017 ஆம் ஆண்டு மதுரை வடக்கு ரோட்டராக்ட் சங்கத்தால் தொடங்கப்பட்டது தான் மகிழ்வித்து மகிழ். ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு 100ற்கும் மேற்ப்பட்ட பெண் குழந்தைகள் , முதியோர் இல்லம் மற்றும் சாலை ஓரம் வசிக்கும் ஆதரவற்றோர்க்கு தங்களால் இயன்ற அளவு உடைகள் மற்றும் உணவுகளை பரிமாறி இன்பத்தை விதைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக