அடுக்கடுக்கான பிரச்சினைகளை சந்திக்கும் இராணி மகாராஜபுரம் பொது மக்கள், அரசிடம் தீர்வு கிடைக்குமென எதிர்பார்த்து காத்திருக்கும் அவலம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 17 நவம்பர், 2023

அடுக்கடுக்கான பிரச்சினைகளை சந்திக்கும் இராணி மகாராஜபுரம் பொது மக்கள், அரசிடம் தீர்வு கிடைக்குமென எதிர்பார்த்து காத்திருக்கும் அவலம்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், ஆறுமுகநேரி பேரூராட்சி வார்டு எண் 14. க்கு உட்பட்ட ராணி மகாராஜபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி அங்குள்ள பொது மக்கள் சார்பில் இராணிமகாராஜபுரம் குடியிருப்போர் நல சங்கம் என்ற அமைப்பு மூலமாக மனு ஒன்றை மாண்புமிகு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், ஆறுமுகநேரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு 05.11.2023 தேதியிட்டு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.




அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பொதுமக்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் சாலைகள் உட்புறச் சாலைகள் 1) வடக்குத்தெரு, 2) மேற்குத் தெரு 3) குறுக்குத் தெரு ஆகிய சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது, மேற்படி சாலைகள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்னர் "கிராம பஞ்சாயத்தாக இருந்த பொழுது போடப்பட்ட சாலைகள் ஆகும்" ராணிமகாராஜபுரம் ஊரானது முதலில் ஊராட்சி ஒன்றியம் அதன்பின்பு பேரூராட்சி அதன் பின்பு தற்பொழுது சிறப்பு நிலை பேரூராட்சி என்ற நிலையில் பல்வேறு நிலைகளை கடந்து வந்துள்ளது.


ஆனால் "சாலை மட்டும் கிராம பஞ்சாயத்து காலகட்டத்தில் போடப்பட்ட நிலையிலிருந்து மாறாமல் தற்போது மிகவும் மோசமான சில சாலைகள் மண் தரையாகவும், சில சாலைகள் பழைய தார் சாலைகள் பெயர்ந்து ஜல்லியும், மண்ணும், மட்டும் உள்ள நிலையில் பொதுமக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது நிலை தடுமாறி விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது". பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் மற்றும் வயதான முதியவர்கள் நடப்பதற்கு என அனைவரும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.


மழை காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் நின்று, நடப்பதற்கு கூட முடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. ஆகையால் மேற்கூறிய சாலைகள் அனைத்தையும் மீண்டும் புதுப்பித்து தரும்படி இராணி மகாராஜபுரம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கேட்டு மனு செய்துள்ளார்.


தவிர மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஒன்று பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி ஆலமரம் முளைத்து சற்று வளர்ந்த நிலையில் உள்ளது. ஆறுமுகநேரி பஞ்சாயத்தை சேர்ந்த ஊழியர் முனியாண்டி என்பவர் பேசுகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தண்ணீர் திறந்து வைத்ததாக கூறுகிறார். ஆனால் அந்த தொட்டியிலிருந்து வந்த குடிநீர் கலங்களாகவும் கழிவு நீர் கலந்து வருவது போலவும் துர்நாற்றம் வீசவும் செய்கிறது என அங்கிருந்த பொது மக்கள் கூறினர். ஆனால் பஞ்சாயத்து நிர்வாகமோ ஒவ்வொரு முறையும் சரியாக பராமரிப்பு செய்ததாக கூறுகிறது, அப்படியானால் ஒரு முறை கூட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் வளர்ந்துள்ள ஆலமரத்தை அகற்றாமல் இருப்பது ஏன் என அப்பகுதியினர் கூறுகின்றனர். 


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் மேற்படி ஊருக்கு அருகில் உள்ளது, அவ்விடத்தில் திருக்கோயிலில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை அவ்விடத்தில் கொட்டி வருவதனால் அந்த கழிவுகளில் இருந்து நோய் பர்வும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் அப்பகுதி மக்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு மனு செய்துள்ளார்கள். எனவே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் போர் கால அடிப்படையில் ராணிமகாராஜபுரம் பகுதிக்கு தீர்வு காண வேண்டுமென சமூக ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்தனர்.


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆறுமுகநேரி பேரூராட்சியை சார்ந்த 5வது வார்டு கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/