தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி யூனியன் பகுதியில், தென்கரை குளம் பாசனம் அடையும் 11 வது மற்றும் 12 வது வாய்க்கால்களை தூர் வாரும் பணிகளை, தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கத்தின் மூலமாக இன்று (03.11.2023) துவக்கி வைத்தனர்.
சகோதரர் எட்வின் ஜெபம் செய்து வைத்தார், சகோதரர் கிளமெண்ட் எபெனேசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார், தென்கரை குளம் விவசாய சங்க பொருளாளர் ஆறுமுக நயினார் என்ற பாஸ்கர், துரை, ஆறுமுக நயினார் முன்னிலை வகித்தனர். இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார், ஆழ்வை பஞ்சாயத்து தலைவர் சாரதா பொன் இசக்கி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த தூர் வாரும் பணிகள் மூலமாக திருநாவிரூடையார்புரம் கிராமத்தின் தேமான்குளம், கீழ வெள்ளமடம், கொமந்தான் நகர், சுப்ரமணியபுரம் மற்றும் சொர்ணம்புதூர் ஆகிய ஊர்களை சார்ந்த விவசாய மக்களும் பயன் பெறுவார்கள், இந்த பணியினால் சுமார் 2300 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் வகையில் அமைந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கி உள்ள நிலையில் இந்த தூர் வாரும் பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக