திருநெல்வேலி - கொண்டாநகரம் மாணவர்கள் காப்பாற்றப்படுவார்களா? - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 நவம்பர், 2023

திருநெல்வேலி - கொண்டாநகரம் மாணவர்கள் காப்பாற்றப்படுவார்களா?

.com/img/a/

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி யூனியனுக்கு உட்பட்ட கொண்டாநகரம் பேருந்து நிறுத்தத்தில் நவ.16 அன்று காலை எடுக்கப்பட்ட காட்சி. குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்குள் செல்ல வேண்டுமே என்ற கட்டாயத்தில் உயிரை பணயம் வைத்து பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள்.


மாணவச் செல்வங்களுக்காக தனி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் அல்லது சேரன்மகாதேவி நடுக்கல்லூர் சுத்தமல்லி வழியாக நெல்லை சந்திப்புக்கு காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.


செவி சாய்க்குமா அரசு அல்லது ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் வரை காத்திருந்து வேடிக்கை பார்க்குமா? வேதனையில் கொண்டாநகர மக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad