சேத்தியாத்தோப்பில் முன்னாள் அரிமா சங்க தலைவரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 நவம்பர், 2023

சேத்தியாத்தோப்பில் முன்னாள் அரிமா சங்க தலைவரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது.

.com/img/a/

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவரும் சேத்தியாத்தோப்பு நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளருமாக பதவி வகித்த திரு. தங்க செங்குட்டுவன் சென்ற வருடம் இதே நாளில் இயற்கை எய்தியதை முன்னிட்டு அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக (03/11/2023 வெள்ளிக்கிழமை) நேற்று சேத்தியாத்தோப்பு தெற்கு மெயின் ரோடு கடைவீதி எஸ் கே டி கூல்ட்ரிங்க்ஸ் அருகில் பலரும் கலந்து கொண்ட நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு சந்தை தோப்பு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் மாணவ மாணவியர் அனைவருக்கும் நோட்டு, புத்தகம், எழுது பொருள்கள் என வகுப்புக்குத் தேவையான பன்னிரண்டு வகை பொருட்கள்  வழங்கப்பட்டது மற்றும் வருகின்ற குளிர்காலத்தை மனதில் வைத்து ஏழை எளியவர்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது. ஏழை, எளியவர்கள் உட்பட கலந்து கொண்ட கிராமத்தினர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மன்றத் தலைவர் தங்க. குலோத்துங்கன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் பட்டு. கணேசன், திமுக நகர செயலாளர் மனோகரன், அரிமா சங்க மாவட்ட தலைவர் டாக்டர் மணிமாறன், நகர வியாபாரிகள் சங்கத் தலைவர் மகாராஜன், நகர அரிமா சங்க தலைவர் சௌந்தர்ராஜன், பொருளாளர் லோகநாதன், முன்னாள் திமுக நகர செயலாளர் ராமலிங்கம் டாக்டர் சிவனேசன், லயன் சண்முகம்,பாலமுருகன், கவுன்சிலர் செந்தில் மற்றும் அரிமா சங்க வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் கிராம பொதுமக்களும் என பலரும் இந்த நினைவஞ்சலியில் கலந்து கொண்டு தங்கள் அஞ்சலியை செலுத்தினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad