சாத்தான்குளம் - சடையன் கிணறு கம்பால் தாக்கி கொலை மிரட்டல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 நவம்பர், 2023

சாத்தான்குளம் - சடையன் கிணறு கம்பால் தாக்கி கொலை மிரட்டல்.

.com/img/a/

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தவறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது.


சாத்தான்குளம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துவேல் (28) என்பவர் கடந்த 24.11.2023 அன்று சாத்தான்குளம் சடையன் கிணறு காலனி பகுதியில் அவரது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு உணவு பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு மது போதையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்டத்தச் சேர்ந்த இளஞ்சிறார் ஒருவருக்கும் முத்துவேலுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு பின்னர் இருவரும் கலைந்து சென்றுள்ளனர்.


இதனையடுத்து அன்று மாலை முத்துவேல் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சடையன்கிணறு சந்திப்பில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மேற்படி இளஞ்சிறாரின் நண்பர்களான சடையன்கிணறு காலனி பகுதியைச் சேர்ந்தவர்களான இசக்கிமுத்து மகன் ஆகாஷ் (23) மற்றும் எழிலரசன் மகன் சிவசங்கர மூர்த்தி (22) ஆகியோர் மேற்படி திருமண வீட்டில் நடைபெற்ற பிரச்சனை குறித்து முத்துவேலிடம் கேட்டு தகராறு செய்து அவரை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


இதுகுறித்து முத்துவேல் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு எதிரிகளான ஆகாஷ் மற்றும் சிவசங்கர மூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad