நாசரேத்தில் - தி மு க பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 17 நவம்பர், 2023

நாசரேத்தில் - தி மு க பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் நவம்பர்:16 நாசரேத்தில் பேரூர் தி மு க சார்பில் பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இந்த கட்டத்தில் நாசரேத் பேரூர் கழக செயலளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கி, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாக முகவர்களின் கடமைகளையும், பூத் கமிட்டியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும், வீடு வீடாக சென்று அவர்கள் உள்ளூரில் இருக்கிறார்களா? வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருக்கிறார்களா? 30 வயதுக்கு மேற்பட்டவர்களா? மாற்று திறனாளிகளா? வாக்காளர் இறந்து விட்டால் அவர்கள் பெயரை நீக்க வேண்டும். 


01.01.2004 அன்று 18லயது நிரம்பக்கூடிய புதிதாக வாக்காளர் சேர்க்க, விடுபட்ட வாக்காளர்கள், இடம் மாறிய வாக்காளர், சேர்க்க, நீக்க மேற்கொள்வதற்கான படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து, திருத்தங்கள் அந்த படிவங்களை, அந்த அந்த முகாம்களில் பாக முகவர்க்கும் பூத் கமிட்டியினரும் நிறம்பட செய்திட வேண்டும். 


வீடு வீடாக சென்று அரசு செய்த சாதனைகளை விளக்கி சொல்ல வேண்டும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் நகர அவை தலைவர் கருத்தையா, பாக முகவர்கள் ஞானராஜ், ஜெபசிங் டேவின் சாலமோன், சிலாக்கியமணி, அன்பு தங்கபாண்டியன், சரவணன், ஜீலியட் எபேநேசர், சந்திரசேகர், மணோகரன், மாற்கு தர்மகன், ஜேம்ஸ் ரவி, உடையார், எமர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/