ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிவராகநல்லூர் கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 நவம்பர், 2023

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிவராகநல்லூர் கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிவராகநல்லூர் கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு ஒன்றியச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜோதி பிரகாஷ், ஒன்றிய பெருந்தலைவர் லதா ஜெகஜீவன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


சிறப்பு விருந்தினர்களாக கழக அமைப்புச் செயலாளரும், கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான ராயபுரம் மனோ, மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் கானூர் பாலசுந்தரம், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆகியோர் பங்கேற்று பூத் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினர்.அப்போது விரைவாக பூத் கமிட்டி பணிகளை முடித்து தலைமைக் கழகத்தில் அதன் விவரங்களை ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தினர். 


இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய கழக அமைப்புச் செயலாளரும் பூத்கமிட்டி பொறுப்பாளருமான ராயபுரம் மனோ பேசும்போது குடும்ப தலைவிகளின் சிரமம் அறிந்து, அவர்களின் நிலைபுரிந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்த திட்டம் தான் தாலிக்கு தங்கம் திட்டம். ஒரு குடும்பத்தின் ஏழ்மையான சூழல் மற்றும் வறுமை வாட்டி வதைக்கும் போது இந்த திட்டத்தால் குடும்பத்தில் திருமணம் நடைபெற உள்ள பெண்களுக்கு மிக எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் திருமணம் நடத்தி வைக்க இந்த அற்புதத் திட்டம் கை கொடுத்து உதவி வந்தது. 


அடுத்த ஆட்சியை அம்மாவின் ஆட்சியாக  எடப்பாடியார்  அமைத்துத் தருவார். மீண்டும் அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கும் அனைவருக்கும் கிடைக்கச் செய்யப்படும் என பேசினார். முடிவில் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் இளவரசன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/