ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீஆதிவராகநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீமுஷ்ணம் வட்டாரக்கல்வி அலுவலர் இந்திரா தலைமை யேற்கபள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி முன்னிலை வகித்தார்.ஆசிரியர் அருள்வடிவேலன் வரவேற்புரையாற்ற கலைக்கழகப் போட்டியில் மாநில அளவில் பங்குபெறச் செல்லும் நாடகத்தை, மாணவர்கள் நடித்து காண்பித்தனர்.
வட்டாரக்கல்வி அலுவலர் நாடக மாணவர்களைப் பாராட்டி மாநில அளவில் வெற்றிபெற வாழ்த்தி வட்டார அளவில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் கொடுத்து குழந்தைகள் தினவிழா சிறப்புகளை எடுத்துக் கூறி பாராட்டிப் பேசினார்.ஆசிரியர்கள் மாலதி, அருள்மேரி, அபிஷேகராயர் ஆகியோர் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கிடஆசிரியர் ஜெயக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக