நாசரேத் - சாலமோன் பள்ளியில் உலக குழந்தைகள் தின விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 நவம்பர், 2023

நாசரேத் - சாலமோன் பள்ளியில் உலக குழந்தைகள் தின விழா.

சாலமோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் உலக குழந்தைகள் தின விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்து பைபிள், பகவத்கீதை, குர்ஆன் வாசித்து தொடங்கப்பட்டது. மாணவி குபேர சத்யா குழந்தைகள் தின உறுதிமொழி வாசித்தார்.


மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்த நாள் விழா பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கி சமாதான புறாக்களை பறக்க விட்டார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் நேரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் குழந்தைகள் தினத்தின் செய்தி வழங்கினார். இந்த விழாவில் குழந்தைகள் நேருவின் வேடம் அணிந்து வந்து இருந்தனர். பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கலை திறனை வெளி கொணரும் வகையில்  பேச்சுப்போட்டி, நடனப் போட்டி, பாட்டுப் போட்டி, நாடகம், கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. 


மாணவர்கள் நேருவின் வாழ்வில் நடந்த ஒரு சில நிகழ்ச்சிகளை நடித்து காட்டினர். பள்ளி உதவி முதல்வர் பியூலா ஜாய்ஸ் நன்றி கூறினார். இறுதியில் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழா ஏற்பாட்டினை உடற்கல்வி ஆசிரியர் ஜோயல் ராஜ்குமார் மற்றும் பிற ஆசிரியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர். தேசிய கீதத்துடன் விழா இனிதே முடிவடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/