தூத்துக்குடி - லெவிஞ்சிபுரத்தில் கொலை முயற்சி 3 பேர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 நவம்பர், 2023

தூத்துக்குடி - லெவிஞ்சிபுரத்தில் கொலை முயற்சி 3 பேர் கைது.

.com/img/a/

தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர்  சாமுவேல், காவலர்  முத்துப்பாண்டி மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட  தனிப்படை போலீசார் நேற்று (05.11.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லிங்கம் மகன் சுடலை (எ) சூர்யா (37), முத்துராஜ் மகன் மூர்த்தி (23) மற்றும் தனுஷ்கோடி மகன் கார்த்திக் (எ) 302 கார்த்திக் (24) என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகளான சுடலை (எ) சூர்யா, மூர்த்தி மற்றும் கார்த்திக் (எ) 302 கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி சுடலை (எ) சூர்யா மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கு உட்பட 5 வழக்குகளும், எதிரி மூர்த்தி மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு உட்பட 16 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 18 வழக்குகளும், எதிரி  கார்த்திக் (எ) 302 கார்த்திக் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி உட்பட 12 வழக்குகளும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 17 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad