தூத்துக்குடி - கிருஷ்ணராஜபுரம் பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 நவம்பர், 2023

தூத்துக்குடி - கிருஷ்ணராஜபுரம் பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது.

தூத்துக்குடி மேலஅலங்கார தட்டு பகுதியைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் தினேஷ் (25) என்பவரும், தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அற்புதம் மகன் மைக்கேல்ராஜ் (28) என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் கடந்த 09.11.2023 அன்று தினேஷ் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதியில் மதுபோதையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த மைக்கேல்ராஜ், தினேஷ் அருகில் வந்து இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் தினேஷ் மற்றும் மைக்கேல்ராஜ் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 


இதனையடுத்து தினேஷ் தூத்துக்குடி மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஷாஜகான் மகன் முகமது ஷானவாஷ் (எ) அஜித் (30) என்பவரிடம் தொலைபேசியில் அழைத்து அங்கு வருமாறு கூறியதின் பேரில் அங்குவந்த முகமது ஷானவாஷ் (எ) அஜித் மற்றும் அவரது நண்பரான தூத்துக்குடி கீழ அலங்காரதட்டு பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் முகைதீன் அப்துல் காதர் (22) ஆகியோர் மைக்கேல் ராஜிடம் தகராறு செய்து அவரது இருசக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கி உள்ளனர்.


இதனால் ஆத்திரமடைந்த மைக்கேல்ராஜ், அவரது தந்தை அற்புதம் (50) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பரான முருகேசன் மகன் மதன் (30) ஆகியோருடன் சேர்ந்து முகமது ஷானாவாஷ் (எ) அஜித், தினேஷ் மற்றும் மைதீன் அப்துல் காதர் ஆகிய 3 பேரையும் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுகுறித்து முகமது ஷானவாஷ் (எ) அஜித் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி எதிரிகளான மைக்கேல்ராஜ், அவரது தந்தை அற்புதம் மற்றும் மதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.


மேற்படி கைது செய்யப்பட்ட  மைக்கேல்ராஜ் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 4 வழக்குகளும், தருவைகுளம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 10 வழக்குகளும்,


அற்புதம் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 2 கஞ்சா வழக்குகளும் சிப்காட் காவல் நிலையத்தில் 2 கஞ்சா வழக்குகள் என 8 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/