காயல்பட்டினம் - நர்சுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3பேர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 நவம்பர், 2023

காயல்பட்டினம் - நர்சுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3பேர் கைது.

.com/img/a/

காயல்பட்டினம், அரசு மருத்துவமனையில் பெண் செவிலியரிடம் தவறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3பேரை போலீசார் கைது செய்தனர்.


தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27.10.2023 அன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு மதுபோதையில் வந்த ஆறுமுகநேரி கீழ நவ்வலடிவிளையைச் சேர்ந்த முருகேசன் மகன் நரேஷ் (34), ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் பிரதாப்சிங் (27) மற்றும் ஆறுமுகநேரி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் மகேஷ் மூர்த்தி (26) ஆகியோர் மேற்படி நர்சிடம் தகராறு செய்து தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


இதுகுறித்து மேற்படி பாதிக்கப்பட்ட நர்ஸ் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி நபர்கள் நரேஷ், பிரதாப்சிங் மற்றும் மகேஷ் மூர்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad