சேத்தியாத்தோப்பு குமார உடைப்பு மதகு 25 கண்மதகு மூலம் தண்ணீர் வெளியேற்றம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 15 நவம்பர், 2023

சேத்தியாத்தோப்பு குமார உடைப்பு மதகு 25 கண்மதகு மூலம் தண்ணீர் வெளியேற்றம்.

.com/img/a/

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பகுதி மற்றும் அதன் மேற்குப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடாத கன மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகள் வயல்வெளிகள் தாழ்வான பகுதிகள் எனப் பல இடங்களிலும் மழை நீர் தேங்கி பொதுமக்கள் விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்த மழைத் தண்ணீரானது சேத்தியாத்தோப்பு அணைக் கட்டுப்பகுதி மற்றும் இதன் அருகில் உள்ள கிராமப்புறங்களில் இருந்து வெளியேற்றப்பட்டும்வருகிறது.


இதனால் நீர்  வரத்து அதிகரித்து வருவதால் இந்த மழை வடிகால் நீரை சேத்தியாத்தோப்பு குமார உடைப்பு வாய்க்கால்மற்றும் 25 கண் மதகு மூலம் வினாடிக்கு 300 கன அடி உபரிநீராக வெள்ளாற்றில் வெளியேற்றப் படுகிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் வரத்தும் அதிகரித்து, உபரி நீர் திறக்கும் அளவும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad