கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சேலம் இளைஞரணி மாநாட்டிற்கு ரூ.25 லட்சம் நிதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், மேயர் மகேஷ் வழங்கினார்.
தி.மு.க இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடக்கிறது.அதன் நோக்கத்தை விளக்கும் வகையில் திமுக இளைஞரணியினர் பைக் பேரணி நடத்தி வருகின்றனர். இந்த பைக் பேரணி இன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் இருந்து துவங்கியது.இப்பேரணி 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் வழியாக 8647 கிலோ மீட்டர் பயணம் செய்து வருகிற 27ஆம் தேதி சேலம் சென்றடைகிறது.
கன்னியாகுமரியில் தொடங்கிய பைக் பேரணியை திமுக இளைஞரணி செயலாளரும்,அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பைக் ஓட்டி துவக்கி வைத்தார். விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சேலம் இளைஞரணி 2-வது மாநாட்டிற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது. நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் காசோலையாக வழங்கினார்.
அருகில் அமைச்சர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, மனோதங்கராஜ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக